வரிவிளம்பரங்கள்
1. ஒரு வரிவிளம்பரத்தை எவ்வாறு வெளியிடுவது?
2. எனது வரிவிளம்பரத்தை எங்கே வெளியிட வேண்டும்?
3. எனது வரிவிளம்பரத்தை எப்படி திருத்துவது அல்லது நீக்குவது?
4. என்னுடைய வரிவிளம்பரம் எத்தனை நாட்கள் செயலில் இருக்கும்?
6. சுவாரஸ்யமான ஒரு வரிவிளம்பரத்தை எவ்வாறு சேமிக்கலாம்?
7. என்னுடைய வரிவிளம்பரத்தை எவ்வாறு பார்ப்பது?
8. ஏன் என்னுடைய வரிவிளம்பரம் நீக்கப்பட்டது?
9. ஒரு வரிவிளம்பரத்திற்கு நான் எவ்வாறு பதிலளிப்பது?
10. வெப்துனியா வரிவிளம்பரத்தில் வரிவிளம்பரங்களை நான் எவ்வாறு தேடுவது?
11. ஒரு புதிய வெளியிடுதல் நிகழும்போது, அதற்கான மின்னஞ்சல் விழிப்பூட்டலை எவ்வாறு பெறுவது?
13. என்னுடைய விளம்பரம் உடனடியாக வெளியிடப்படுமா?
14. எனது தேடல் அளவைகளுடன் பொருந்தும் விளம்பரங்கள் பற்றி எனக்கு அறிவிப்புகள் தரப்படுமா?
15. என்னுடைய கடவுச்சொல்லை மறந்துவிட்டேன். நான் என்ன செய்ய வேண்டும்?
16. என்னுடைய விளம்பரத்திற்கான மறுமொழிகள் எதையும் நான் ஏன் பெறுவதில்லை?
17. வெப்துனியா வரிவிளம்பரத்தில், என்னுடைய நகரத்தின் பெயர் தரப்படவில்லையெனில் என்ன செய்வது?
பொது
1. வெப்துனியா வரிவிளம்பரத்தில் நான் எங்கு பதிவு செய்ய வேண்டும்?
2. என்னுடைய இடைமுக மொழியை எவ்வாறு மாற்றுவது?
3. வெப்துனியா வரிவிளம்பரத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்னென்ன?
4. தவறான, தேவையற்ற, அல்லது ஆபாச உள்ளடக்கத்தைப் பற்றி எப்படி புகார் கொடுப்பது?
5. வரிவிளம்பரம் மூலம் யாரேனும் எனக்கு தொல்லை கொடுத்தால், நான் என்ன செய்ய வேண்டும்?
வரிவிளம்பரங்கள்
1. ஒரு வரிவிளம்பரத்தை எவ்வாறு வெளியிடுவது? 
வெப்துனியா வரிவிளம்பரங்களின் முகப்பு பக்கத்தில் விளம்பரத்தை வெளியிடு தாவலைக் கிளிக் செய்து, உங்கள் வரிவிளம்பரம் வெளியிடப்படவேண்டிய வகை, துணை வகை, நாடு, நகரம், போன்றவற்றைத் தேர்வு செய்து உங்கள் விளம்பரத்தின் தலைப்பு மற்றும் விவரங்களை (சிவப்பு நட்சத்திரக்குறியுடன் உள்ள விவரங்களை கண்டிப்பாக நிரப்ப வேண்டும்) உள்ளிடவும். உங்கள் வகைக்கு ஏற்ற கூடுதல் விவரங்களை அளித்து சாளரத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள "விளம்பரத்தை வெளியிடு" என்ற தாவலைக் கிளிக் செய்யவும். உங்கள் விளம்பரத்தைக் காண, "விளம்பர முன்னோட்டம்" என்பதைக் கிளிக் செய்யவும்.
விளம்பரத்தை வெளியிடும் முன், வெப்துனியா வரிவிளம்பர உள்நுழைவு ஐ.டி, உங்களிடம் இருக்க வேண்டும்.
பதிவுசெய்யும்போது உங்களால் தரப்பட்ட மின்னஞ்சல் முகவரியில், விளம்பரத்தை வெளியிட்டதற்கான உறுதிபடுத்தல் மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.
அவ்வளவுதான். இன்னும் சில நிமிடங்களில் வெப்துனியா வரிவிளம்பர வலைவாசலில் உங்கள் வரிவிளம்பரம் தோன்றும் மற்றும் அங்கு 365 நாட்கள் வரை செயலில் இருக்கும்.
2. எனது வரிவிளம்பரத்தை எங்கே வெளியிட வேண்டும்? 
ஒரு விளம்பரம் சரியான வகையின் கீழ் வெளியிடப்பட வேண்டும். உங்கள் வரிவிளம்பரத்தை வெளியிட சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும், இல்லையெனில் உங்கள் விளம்பரம், சமூகத்தால் "தவறான வகை" என்று குறிக்கப்படும்(படலாம்).
உங்கள் வகையைத் தேர்ந்தெடுப்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், எங்களை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளவும்: classifieds@webdunia.net
3. எனது வரிவிளம்பரத்தை எப்படி திருத்துவது அல்லது நீக்குவது?
உங்கள் வரிவிளம்பரத்தை திருத்த/நீக்க இந்த செயல்களைப் பின்பற்றவும்:
செயல்1: உள்நுழைவு ஐ.டி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி வெப்துனியா வரிவிளம்பரத்தில் உள்நுழையவும்.
செயல்2: : விளம்பரங்களை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
செயல்3:பார்க்க/திருத்த/நீக்க வேண்டிய விளம்பரத்தைத் தேர்ந்தெடுத்து செயல் நெடுவரிசையிலிருந்து செயல் என்பதைத் தேர்வு செய்யவும்.
செயல்4: அதிலுள்ள இணைப்புகளைக் கிளிக் செய்து உங்கள் விளம்பரங்களைப் பார்க்கலாம்/திருத்தலாம்/நீக்கலாம்.
4. என்னுடைய வரிவிளம்பரம் எத்தனை நாட்கள் செயலில் இருக்கும்? ?
விளம்பரத்தின் வெளியீடு உறுதி செய்யப்படும் நாளிலிருந்து, 365 நாட்கள் வரை உங்கள் வரிவிளம்பரம் செயலில் இருக்கும். 365 நாட்களுக்குப் பின், உங்கள் வரிவிளம்பரத்தைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்கும் மின்னஞ்சலை, நீங்கள் பதிவு செய்த முகவரியில் பெறுவீர்கள். உங்கள் வரிவிளம்பரத்தைப் புதுப்பிக்க விரும்பினால், அந்த அஞ்சலில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும், புதுப்பிக்க விரும்பவில்லை எனில் அஞ்சலை புறக்கணித்து விடவும்.
5. என்னுடைய வரிவிளம்பரத்தை வெளியிடுவதற்கான உறுதிபடுத்தல் மின்னஞ்சலை பெறவில்லையெனில் நான் என்ன செய்ய வேண்டும்? 
உறுதிப்படுத்து மின்னஞ்சலை நீங்கள் பெறவில்லையென்றால், பதிவு செய்யும்போது நீங்கள் தந்த மின்னஞ்சல் முகவரியுடன்தான் உள்நுழைந்துள்ளீர்களா எனவும், அந்த முகவரியில் உங்கள் விளம்பரத்திற்கான உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெற்றுள்ளீர்களா எனவும் உறுதி செய்து கொள்ளவும்.
6. சுவாரஸ்யமான ஒரு வரிவிளம்பரத்தை எவ்வாறு சேமிக்கலாம்? 
ஒவ்வொரு வரிவிளம்பரத்தின் மேற்பகுதியிலும் காணப்படும் "விருப்பங்களில் சேமி" என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் சுவாரஸ்யமான வரிவிளம்பரங்களை சேமித்துக் கொள்ளலாம்.
உங்களின் விருப்பங்களின் பட்டியலில் நீங்கள் எத்தனை விளம்பரங்களை வேண்டுமானாலும் சேமித்துக் கொள்ளலாம்.
6. என்னுடைய வரிவிளம்பரத்தை எவ்வாறு பார்ப்பது? 
உங்களுடைய வரிவிளம்பரங்களைப் பார்ப்பதற்கு இரு வழிகள் உள்ளன.
உங்கள் வரிவிளம்பரத்தை வெளியிடுவதை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் அனுப்பிய மின்னஞ்சலை மீண்டும் கிளிக் செய்யவும்.
வெப்துனியா வரிவிளம்பர வலைவாசல் டேஷ்போர்டின் இடது பட்டியில் உள்ள "என் விளம்பரங்கள்" > "விளம்பரங்களை நிர்வகி" என்னும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.
இங்கே, உங்கள் விளம்பரங்களைப் பார்க்க/திருத்த/நீக்க உங்களால் முடியும்.
8. ஏன் என்னுடைய வரிவிளம்பரம் நீக்கப்பட்டது? 
வரிவிளம்பரம்/வரிவிளம்பரங்கள் பின்வரும் காரணங்களால் நீக்கப்பட்டிருக்கலாம்:
• வெளியீட்டுக் கால அளவான 365 நாட்கள் நிறைவுற்றிருக்கலாம்.
• வரிவிளம்பரம் தவறானது எனக் குறித்து சமூகம் நீக்கியிருக்கலாம்.
9. ஒரு வரிவிளம்பரத்திற்கு நான் எவ்வாறு பதிலளிப்பது? 
ஒவ்வொரு வரிவிளம்பரத்தின் வலது புறமும் விளம்பரதாரரைத் தொடர்பு கொள்க என்னும் புலம் இருக்கும். உங்கள் பெயர், மின்னஞ்சல் ஐ.டி., தொடர்பு எண் மற்றும் செய்தியை உள்ளிட்டு அவற்றை விளம்பர உரிமையாளருக்கு அனுப்பலாம். அனுப்பப்பட்ட விவரங்களை, நீங்கள் தொடர்பு கொள்ளும் நபரால் காணமுடியும்.
10. வெப்துனியா வரிவிளம்பரத்தில் வரிவிளம்பரங்களை நான் எவ்வாறு தேடுவது? 
உங்களுக்கு விருப்பமான புலங்களை, தேர்ந்தெடுக்கப்பட்ட வகையில் தேர்வு செய்வதன் மூலம் வரிவிளம்பரங்களை நீங்கள் தேடலாம். தேடல் புலங்கள் ஒவ்வொரு வகைக்கும் வேறுபட்டு இருக்கும். வெப்துனியா வரிவிளம்பர வலைவாசலில் உங்கள் ஐ.டி-ஐ பதிவு செய்வதற்கு முன்னும் பதிவு செய்த பின்னும் விளம்பரங்களைத் தேடலாம். பல்வேறு புலங்களில் உள்ள விருப்பங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் தேவைக்கேற்ப தேடுதலை சுருக்கியப் பின் தேடு என்பதை கிளிக் செய்யவும்.
10. ஒரு புதிய வெளியிடுதல் நிகழும்போது, அதற்கான மின்னஞ்சல் விழிப்பூட்டலை எவ்வாறு பெறுவது? 
ஒரு முறை வெப்துனியா வரிவிளம்பரத்தில் பதிவு செய்த பின், டேஷ்போர்டின் இடது பலகத்தில் உள்ள "என் விழிப்பூட்டல்கள்" > "புது விழிப்பூட்டலை அமை" என்பதன் மூலம் விழிப்பூட்டல்களை அமைக்கலாம். இது தேர்ந்தெடுத்த/விருப்பப்மான புலங்களைக் கொண்டு வரிவிளம்பரங்களைத் தேடும், இந்த தேடப்பட்ட வகையை "விழிப்பூட்டலை நிர்வகி" என்னும் விருப்பத்தில் ("புதிய விழிப்பூட்டலை அமை" என்ற புலத்தின் சற்று கீழே இது காணப்படும்) சேமிக்கும், இங்கே விழிப்பூட்டலை நீங்கள் மாற்றலாம்/நீக்கலாம். உங்கள் தேவைகளுக்கு பொருந்தும் ஒரு புதிய வரிவிளம்பரம் ஒவ்வொரு முறை வெளியிடப்படும்போதும், ஒரு மின்னஞ்சல் அறிவிப்பை பெறுவீர்கள்.
12. என்னுடைய வரிவிளம்பரத்துடன் ஒரு புகைப்படத்தை வெளியிட/புதுப்பிக்க/சேர்க்க நான் என்ன செய்ய வேண்டும்?
• உங்களுடைய "மின்னஞ்சல் ஐ.டி." மற்றும் "கடவுச்சொல்" மூலம் வெப்துனியா வரிவிளம்பர வலைவாசலில் உள்நுழையவும்.
• "என் விளம்பரங்கள்" > "விளம்பரங்களை நிர்வகி" என்பதை கிளிக் செய்யவும்.
• "திருத்து" என்னும் இணைப்பைக் கிளிக் செய்து "படத்தைப் பதிவேற்று" விருப்பத்தில் படத்தைப் பதிவேற்றவும்.
உங்களால் பதிவேற்றப்பட்ட படம், வலைவாசலில் காண்பிக்கப்படும் முன் வெப்துனியா வரிவிளம்பர நிர்வாகிகளால் சரிபார்க்கப்படும்.
13. என்னுடைய விளம்பரம் உடனடியாக வெளியிடப்படுமா?
ஆம். வலைவாசலில் வெளியிடப்பட்ட/உருவாக்கப்பட்ட ஒவ்வொரு விளம்பரமும் உடனடியாக வலைவாசலில் காண்பிக்கப்படும். ஆனால், விளம்பரத்தில் இருக்கும் படம் (ஏதேனும் இருந்தால்), வெப்துனியா வரிவிளம்பர நிர்வாகி மூலம் செல்லுபடியாக்கப்பட/சரிபார்க்கப்பட வேண்டும்.
14. எனது தேடல் அளவைகளுடன் பொருந்தும் விளம்பரங்கள் பற்றி எனக்கு அறிவிப்புகள் தரப்படுமா?
ஆம். விழிப்பூட்டல் அமைக்கப்பட்டிருந்தால், உங்கள் தேடல் அளவைகளுடன் பொருந்தும் விளம்பரங்களின் பட்டியல், திரையில் தோன்றும்.
15. என்னுடைய கடவுச்சொல்லை மறந்துவிட்டேன் அல்லது என்னுடைய கடவுச்சொல்லை மாற்றியமைக்க விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?
• வெப்துனியா வரிவிளம்பரங்களைப் பார்வையிடுக
•
உள்நுழை இணைப்பைக் கிளிக் செய்யவும்.
•
"கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
• உங்களின் மின்னஞ்சல் ஐ.டி மற்றும் சரிபார்ப்புக் குறியீட்டை உள்ளிடவும்.
கடவுச்சொல் மாற்றப்பட்டதை உறுதிபடுத்தும் ஒரு அஞ்சல் உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். உங்கள் அஞ்சல் ஐ.டி- இன் உள் நுழைந்து கடவுச்சொல்லை மீட்டெடுக்க/மீட்டமைக்க உங்கள் கணக்கிலிருந்து உறுதிபடுத்தல் நிலையை அனுப்பவும். உங்கள் அஞ்சல் ஐ.டி-க்கு கடவுச்சொல் அனுப்பப்படும்.
16. என்னுடைய விளம்பரத்திற்கான மறுமொழிகள் எதையும் நான் ஏன் பெறுவதில்லை?
ஒரு விளம்பரத்திற்கு மறுமொழிகள் கிடைக்காமலிருப்பதற்கான பொதுவான காரணம் தவறான தொடர்பு விவரங்கள் / தகவல்கள் தரப்பட்டிருப்பதே ஆகும். என் சுயவிவரம் என்ற பிரிவில் உங்களைத் தொடர்புகொள்வதற்கான விவரங்கள் குறிப்பாக, நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரி/மொபைல் எண் போன்றவற்றைச் சரிபார்க்க பரிந்துரைக்கிறோம். சரியான வகையில்தான் உங்கள் விளம்பரத்தை வெளியிட்டுள்ளீர்களா என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ளவும்.
17. வெப்துனியா வரிவிளம்பரத்தில், என்னுடைய நகரத்தின் பெயர் தரப்படவில்லையெனில் என்ன செய்வது?
classifieds@webdunia.net என்னும் முகவரியில் புதிய நகரங்கள் அல்லது புதிய இருப்பிடத்தை பரிந்துரைக்கவும். உங்களுடைய இருப்பிடத்தைச் சரியான இருப்பிட அடையாளத்துடன் குறிப்பிட்டால், அதனை சற்று விரைவாக சேர்த்துக் கொள்ள முடியும்.
பொது
1. வெப்துனியா வரி விளம்பரத்தில் நான் எங்கு பதிவு செய்ய வேண்டும்? 
வெப்துனியா வரிவிளம்பரத்தில் பதிவு செய்ய, உங்களுக்கு கண்டிப்பாக மின்னஞ்சல் ஐ.டி இருக்கவேண்டும். (வலைவாசலில் உள்ள இருப்பிடத்தைக் குறிப்பிடவேண்டும்).
உங்களின் அல்லது மற்றவர்களின் வரிவிளம்பரங்களை பதிவு செய்யாமலே தேடமுடிந்தாலும், உங்கள் விளம்பரத்தை வெளியிட நீங்கள் பதிவு செய்தாக வேண்டும். "உள்நுழை" என்னும் இணைப்பைக் கிளிக் செய்து அங்கே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
ஒரு வேளை உங்களிடம் மின்னஞ்சல் ஐ.டி இல்லாவிட்டால், நீங்கள் வெப்துனியா வரிவிளம்பரம் பக்கத்தின் மேலே உள்ள "பதிவு பெறு" என்ற இணைப்பைப் பயன்படுத்தி "வெப்துனியா அஞ்சலில் பதிவு பெறுதல்" என்பதைக் கிளிக் செய்து புதிய மின்னஞ்சல் ஐ.டியை உருவாக்கி கொள்ளலாம்.
2. என்னுடைய இடைமுக மொழியை எவ்வாறு மாற்றுவது?
உங்கள் பக்கத்தின் இடைமுக மொழியை மாற்றுவதற்கு, வெப்துனியா வரிவிளம்பர முகப்பு பக்கத்தின் வலது மேல் மூலையில் உள்ள மொழி தாவல்களில் விருப்பமானதை கிளிக் செய்யவும்.
3. வெப்துனியா வரிவிளம்பரத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்னென்ன? 
4.தவறான, தேவையற்ற, அல்லது ஆபாச உள்ளடக்கத்தைப் பற்றி எப்படி புகார் கொடுப்பது? 
தவறான, தேவையற்ற, அல்லது ஆபாச உள்ளடக்கத்தைப் பற்றி புகார் கொடுப்பதற்கு, அந்த விளம்பரத்தையும் அதில் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத உள்ளடக்கத்தைப் பற்றிய விவரத்தையம் இணைத்து ஒரு மின்னஞ்சலை classifieds@webdunia.net என்னும் எங்களின் அலுவல் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
விளம்பரத்தைப் பார்க்கும்போது, விளம்பரப் பகுதிகளின் மேலே உள்ள புகார் செய்யவும் என்னும் தாவலைக் கிளிக் செய்து அந்த விளம்பரத்திலுள்ள தேவையற்ற தரவுகளைப் பற்றி புகார் கொடுக்கலாம்.
புகார் கொடுப்பதற்கு உங்களிடம் வெப்துனியா உள்நுழைவு ஐ.டி இருக்க வேண்டும்.
தேவையில்லாத விளம்பரம் என புகார் கொடுப்பதன் காரணத்தைத் தேர்ந்தெடுத்து, உங்களின் சரிபார்த்தல் குறியீட்டைத் தட்டச்சு செய்து கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளலாமா அல்லது மறுக்கலாமா என்று முடிவெடுக்கும் நிர்வாகிக்கு, உங்கள் கோரிக்கை அனுப்பி வைக்கப்படும்.
5. வரிவிளம்பரம் மூலம் யாரேனும் எனக்கு தொல்லை கொடுத்தால், நான் என்ன செய்ய வேண்டும்?
யாரேனும் வரிவிளம்பரம்/கருத்துரை மூலம் உங்களுக்குத் தொல்லைக் கொடுத்தால், அவர்கள் உங்களுக்கு எப்படி தொல்லை கொடுக்கிறார்கள் மற்றும் ஏன் அது தொல்லையாக தோன்றுகிறது என்னும் காரணங்களைக் குறிப்பிட்டு classifieds@webdunia.net முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
குறிப்பு : விளம்பரத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்து வெளியிட்ட நபரைத் தொடர்புக் கொள்ள, விளம்பரம் வெளியிடப்பட்ட நகரம், வகை மற்றும் அதன் தலைப்பு ஆகியவற்றைக் குறிப்பிடவும்.